இனிப்பு ஆப்பம்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1 டம்ளர்
பச்சரிசி – ஒன்றரை டம்ளர்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – அரை டம்ளர்
ஆப்ப சோடா – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 கைப்பிடி
சின்ன ஜவ்வரிசி – 1 தேக்கரண்டி
வெல்லம் – 1/4 கிலோ
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். மாவை எடுக்கு முன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

அதன்பின்பு ஆப்ப சோடா சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி, மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்க வேண்டும்.

Leave a Reply