தமிழை விட பழமையானது சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

தமிழை விட பழமையானது சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

தமிழை விட பழமையானது சமஸ்கிருதம் என்றும் சமஸ்கிருதம்தான் தேசிய மொழி என்றும் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது

ஹிந்தி தான் தேசிய மொழி என நடிகர் அஜய் தேவ்கான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கங்கனா ரணாவத் என்னை பொருத்தவரை சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்றும் அந்த மொழி தமிழ் கன்னடம் குஜராத்தி ஆகியவற்றை விட பழமையானது என்றும் தெரிவித்துள்ளார்

எனவே அனைத்து மொழிகளையும் விட பழமையான மொழியான சமஸ்கிருதம் தான் இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது