11 லட்சம் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டதாக தகவல்: அதிர்ச்சி காரணம்!
டென்மார்க் நாட்டில் 11 லட்சம் தடுப்பூசிகள் அழிக்கப்படவுள்ளன என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
டென்மார்க் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால் அந்த தடுப்பூசிகளை அழிக்க முடிவு செய்துள்ளது
ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந்த தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு நன்கொடையாக கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் எனவே இதனை மொத்தமாக அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது