பங்குச்சந்தையில் 50 லட்சம் மோசடி: 7 பேர் கைது!
பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி ரூ 50 லட்சம் மோசடி செய்த ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பங்குச் சந்தை புரோக்கர் அலுவலகம் ஒன்றில் பொதுமக்கள் தங்கள் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று விளம்பரம் செய்துள்ளனர்
இதனை நம்பிய பலர் அவருக்கு பணம் அனுப்பிய நிலையில் இது முழுக்கமுழுக்க மோசடி என்பது தெரியவந்தது
இதனை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்து அந்த அலுவலகத்தில் இருந்த ஏழு பேரை கைது செய்தனர்
மேலும் 50 லட்சம் ரொக்கம் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன