இதுதான் உலகின் மிக அழகான சைக்கிள் பாதை: ஆச்சரிய புகைப்படம்
இது தான் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் ஓட்டும் பாதை என ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது
நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி என்ற பகுதியில் உள்ள பாதை தான் உலகிலேயே மிகச் சிறந்த சைக்கிள் ஓட்டும் பாதை என்று பதிவு செய்துள்ளார்
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஒரு பக்கம் கடல் இன்னொரு பக்கமும் தண்ணீர் என மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த இடத்திற்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்று அனைவரும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்