தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
தமிழகம் கேரளா மற்றும் தென் மாநிலங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தமிழகம் கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மே 21ஆம் தேதி வரை அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலின் தென் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் எனவே மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது