கேக்கில் முட்டை இருக்கின்றதா? கேள்வி கேட்ட கஸ்டமருக்கு பேக்கரி அளித்த பதில்!
கேக்கில் முட்டை இருக்கின்றதா? என்ற கேள்வி கேட்ட கஸ்டமருக்கு பேக்கரி அளித்த பதில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் ஸ்வக்கியில் கேக் ஆர்டர் செய்தார்
மேலும் அந்த கேக்கில் முட்டை இருக்கிறதா என்பதை குறிப்பிடவும் என்றும் அவர் பதிவு செய்து இருந்தார்
இதனை அடுத்து பேக்கரி அனுப்பியுள்ள கேக்கில் ’இதில் முட்டை கலந்துள்ளது’ என்ற எழுத்துக்களுடன் கூடிய கேக்கை அனுப்பி வைத்தது
இந்த கேக்கை பார்த்தவுடன் தன்னால் பேசுவதற்கு வார்த்தை இல்லை என்றும் அவர் கூறியதை அடுத்து இது ஒரு நகைச்சுவையான மிஸ்டேக் என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன