மீண்டும் கொரோனா பரவல் ! சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்து விட்டதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூன் மாதத்தில் கொரோனா 4 வது அலை பரவல் இருக்கலாம் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.