டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், உலகளவில் பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், உலகப் பொருளாதாரம் குறித்து எனக்கு மோசமான உணர்வு ஏற்பட்டுள்ளது.
அதனால் டெஸ்லாவில் 10% ஊழியர்களைக் குறைக்கப் போகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அலுவலகத்திற்கு வராதவர்கள் வேலையை விட்டு செல்லலாம் எனக் கூறியிருந்தார்.