இனி ரேஷன் பொருட்கள் வாங்கவே முடியாது.. ரேஷன் அட்டைக்கு ஆபத்து!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையிலும் இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பலரும் முறைகேடாக பொருள்களைப் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.

அதன்படி ரேஷன் கடைகளில் தகுதி உடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் கோடிக்கணக்கான பயனாளிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதற்கு அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. எனவே இனி தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கவே முடியாது.