4 சிறுமிகள் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
4 சிறுமிகள் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்
தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்படாதது தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்