கன்னியாகுமரியில் இருந்து காஷ்மிர் வரை- காங்கிரஸ் பாத யாத்திரை

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நாடு தழுவிய அளவில் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் தலைவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மிர் வரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை சென்று மக்களை சந்திக்க உள்ளனர்.

இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்.