ஜூன் மாதத்தில் கொரோனா 4 வது அலை வரக்கூடும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ற கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரே நாளில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா தொற்று 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பலி கடந்த 24 மணி நேரத்தில் 24 பேராக அதிகரித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,791 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் மொத்தம் 36 ஆயிரத்து 267 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் நேற்று ஒரே நாளில் 15,31,510 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.