இன்று ஜூன்11ம் தேதி சென்னை முழுவதும் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், ரேஷன் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,முகவரி மாற்றம் உட்பட அனைத்து வகையான திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும்