இன்று ஆளுநர் டெல்லி பயணம்!! மோடியுடன் சந்திப்பு!!

இன்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார்.

ஆளுநர் நாளை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநரின் டெல்லி பயணமும், நேரில் பிரதமரை சந்திக்கச் செல்வதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.