ஸ்விக்கி,ஜொமைட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று நுகர்வோர் விவகாரங்கள் செயலர் ரோகித் குமார் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகள் ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மீது எழுப்பப்படும் புகார்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார துறை அறிவுறுத்தியுள்ளது.