தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வளிமண்டல வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.