கொரோனாவால் 18 வயது இளம்பெண் உயிரிழப்பு!!

தமிழகம் உட்பட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், கோவையில் 26 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் எந்தவித நோயும் இல்லாத நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.