தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்குள் நுழைபவர்கள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதே நேரம் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.