தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.