காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவர் வீட்டிலேயே தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 12-ம் தேதி சோனியாவுக்கு மூக்கில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோனியா காந்தியின் சுவாச மண்டலத்தில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.