ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணங்களை பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.-யிடம் வழங்கியுள்ளது.
ஆதித்தியா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அவரது நிறுவனமான ஹிண்டால்கோ மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை சில தினங்களுக்கு முன் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் பிரதமரும் குற்றவாளியே என்று பரேக் பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.
ஹிண்டால்கோ ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைப்பு அத்துடன் ஹிண்டால்கோவுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி பிரதமர் அலுவலகத்துக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. இதைத் தொடர்ந்து தற்போது ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கூடுதல் ஆவணங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.