தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4நாட்களுக்கு தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய கிழக்கு,தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.