தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரி அடையாள அட்டை, 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் வங்கி கணக்கு உட்பட மற்ற தகவல்களை பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.