இணையத்தளம் ஒன்றினை உருவாக்கும்போது அதனுடன் தொடர்பான பல வெளி இணைப்புக்கள் ( எக்ஸ்டர்நல் லிங்க்ஸ்) உருவாக்கப்படுவது அறிந்த ஒன்று.
இவ்வாறு உருவாக்கப்படும் வெளி இணைப்புக்கள் சில சமயங்களில் பயனற்றதாகக் காணப்படும். அதாவது குறித்த இணைப்புக்கள் செயலற்றதாக காணப்படுவதால் அவ்விணையத்தளத்தினை முழுமையாக பார்வையிடுவதில் அசௌகரியம் எதிர்நோக்கப்படுவதுன் நேரமும் வீணடிக்கப்படும்.
எனவே இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யது பயனர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்காக குறித்த இணைத்தளத்தினை முகாமை செய்பவர்களுக்கு க்ஷெனு லிங்க் ஸ்லூத் எனும் மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.