மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே பெரும் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
. அத்துடன் ஜூன் 30ம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது