தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.