4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி! சதுரகிரி

சதுரகிரியில் நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டும், நாளை ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டும், நேற்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல் நாளிலேயே பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டமாக திரண்டு வந்து வழிபட்டனர்.

நேற்று காலை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இரவு நேரங்களில் கோவிலிலும், அதை சுற்றிய மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.