ஜூலை 17ல் நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அதன்படி, நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.

ஜூலை 15-ம் தேதி கியூட் தேர்வும், ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வும், ஜூலை 21-ம் தேதி ஜி மெயின் தேர்வும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.