தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க இருக்கிறார்
இதனைத் தொடர்ந்து 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.
மாலை 4.45 மணிக்கு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றுகிறார்.
இதனால் 3 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.