10 மாத பெண் குழந்தைக்கு ரயில்வேயில் வேலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், விபத்தில் தனது பெற்றோர்களை இழந்த 10 மாத பெண் குழந்தைக்கு இந்திய ரயில்வே வேலை வழங்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் இருப்பவர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில், ராஜேந்திர குமாரின் என்பவரின் மகள் 10 மாத குழந்தைக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பணியாளர்கள் துறையில் (SECR) கருணை பணி நியமனத்திற்காக 10 மாத பெண் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டது.