மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய திமுக அமைச்சர்! வைரல் வீடியோ

விருதுநகர்,அருப்புக்கோட்டை அருகே பொது மக்கள் மனு கொடுக்க கூட்டமாக திரண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொகுதி மக்களிடம் இருந்த மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது மனு கொடுத்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரை தான் கையில் வைத்திருந்த கடித உறையால் தாக்கினார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோவை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.