கன மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத். 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

குஜராத்தில் கனமழை காரணமாக பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழையானது மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தெற்கு குஜராத் பகுதியில் தான் வெள்ள ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சூரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அந்நகரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மேலும், மாநிலத்திலேயே அதிகபட்சமாக சூரத் நகர் தீவிர வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பல முக்கிய சாலைகளில் நீர் வடியாமல், சில அடி உயரத்திற்குத் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. பெட்ரோல் பங்க் போன்றவற்றின் செயல்பாடும் தடைப்பட்டுள்ளது.