சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில், கடந்த 13-ம் தேதி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மொத்தம் 481 வாடிக்கையாளர்களின், 31 கிலோ 700 கிராம் தங்க நகைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 9 இடங்களில் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.அதில், கோயம்மேடு பேருந்து நிலையத்தில் சந்தோஷ் என்பவரிடம் இருந்து 15 கிலோ 951 கிராம் தங்கமும்,ஜெய் நகர் பார்க் பகுதியில் சூர்ய பிரகாஷிடம் 8 கிலோ 827 கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் இருந்து 3 கிலோ 590 கிராம் தங்க நகைகளும்,குரோம்பேட்டையில் உள்ள சந்தோஷின் பாட்டி வீட்டில் இருந்து 2 கிலோ 656 கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டன.மேலும், கோயம்மேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாலாஜியிடம் 63 கிராமும், செந்திலிடம் 80 கிராமும், முருகனிடம் 373 கிராம் தங்க நகைகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.அத்துடன், பாலாஜியின் வில்லிவாக்கம் வீட்டில் 100 கிராம் தங்கமும்,கோவையில் ஸ்ரீவஸ்தவா என்பவரிடம் இருந்து 63 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.