நிதிஷ்குமாருடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்: மம்தா பானர்ஜி

நிதிஷ்குமாருடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்: மம்தா பானர்ஜி

2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாருடன் இணைந்து கைகோர்த்து தேர்தலை சந்திப்போம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வருகிற பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியை செய்து வருகிறார்

இதற்காக அவர் தற்போது டெல்லியில் இருக்கும் நிதிஷ்குமார் அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை நிதிஷ்குமாருடன் இணைந்து சந்திப்போம் என்றும் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டால் அது ஒருபோதும் நடக்காது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்