பொறுத்திருந்து பாருங்கள்; ஓபிஎஸை சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு சசிகலா பதில்

பொறுத்திருந்து பாருங்கள்; ஓபிஎஸை சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு சசிகலா பதில்

ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் வரவேற்பேன் எனவும் அதிமுகவின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் அவரை வரவேற்பேன் என்றும் அவர் மட்டுமல்ல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றார்கள் என்றும் அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சசிகலா கூறியுள்ளார்