அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: மின்கட்டண உயர்வை அடுத்து மின்சார சேவைக்கட்டணம் இரு மடங்கு உயர்வு

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: மின்கட்டண உயர்வை அடுத்து மின்சார சேவைக்கட்டணம் இரு மடங்கு உயர்வு

தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது புதிய மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகிக்க பகுதிகளில் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750 என உயர்வு என்றும், இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு என்றும், பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200 என உயர்வு என்றும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800 என உயர்வு என்றும், வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 என உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200 என உயர்வு என்றும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் என உயர்வு என்றும், இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு என்றும், மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750 என உயர்வு என்றும், வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 என உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.