பறவைக் காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல்: கேரள மக்கள் அச்சம்
கேரளாவில் பறவைக் காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சலும் பரவுவதால் மத்திய அரசின் சுகாதார குழு அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது.
கேரளாவை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதையடுத்து 20 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் பறவைகளை அடுத்து தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவதால் கேரள மாநில சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் மத்திய அரசும் கேரள அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது