சென்னையில் மழை குறையுமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேகக்கூட்டங்கள் தற்போது சென்னையில் நெருங்கி உள்ளதாகவும், இந்த மழை நீண்ட நெடிய மழையாக அமையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் இருந்து மேகக் கூட்டங்கள் உள் மாவட்டங்களில் நோக்கி நகரும் என்றும், அதனால் சென்னையில் படிப்படியாக மழை குறைந்து உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.