உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளனர்.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தலைமை நீதிபதி லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.
எனவே இந்த வழக்கில் அதிகபட்சமாக மூன்று பேர் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.