சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை!

சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை!

சென்னையில் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கால்வாயில் குப்பைகளை கொட்டும் வழக்கம் ஒரு சிலரிடம் இருந்து வருகிறது

முக்கியமாக கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் மழை நேரத்தில் கால்வாயில் தண்ணீர் செல்வது தடைபடுகிறது

இதனையடுத்து சென்னை மாநகராட்சி இன்று விடுத்துள்ள உத்தரவில் சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது