சென்னையில் தொடர்ந்து கனமழை: பொதுமக்கள் அவதி
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் அவதி உள்ளனர்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இன்று அதிகாலை அலைகள் சீறியதாகவும் கூறப்படுகிறது
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
சென்னையில் உள்ள மந்தைவெளி மயிலாப்பூர் அடையாறு கோடம்பாக்கம் ராயப்பேட்டை மணப்பாக்கம் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது