இன்று முதல் மீண்டும் கனமழை: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக தகவல்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதிய காற்றழுத்தம் காரணமாக நவம்பர் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது