70 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய முதியவர்: பரபரப்பு தகவல்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 70 வயதான ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை அவர் தனது தேர்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்திருந்ததை அடுத்து அவர் சிரமம் எடுத்து படித்து இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்