தேர்வில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு: ரூ.12 கோடி இழப்பீடு பெற்ற சகோதரிகள்

தேர்வில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு: ரூ.12 கோடி இழப்பீடு பெற்ற சகோதரிகள்

தேர்வில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கல்வி நிறுவனம் சுமத்திய நிலையில் அந்த கல்வி நிறுவனம் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்து 12 கோடி ரூபாய் இரட்டை சகோதரிகள் இழப்பீடாக பெற்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இரட்டை சகோதரிகள் படித்து வந்தனர். அவர்கள் ஒரே மாதிரியான பதில்களை எழுதியதால் மோசடி செய்ததாக கல்வி நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

இதனை அடுத்து கல்வி நிறுவனத்துக்கு எதிராக இரட்டைச் சகோதரிகள் அவதூறு வழக்கு தாக்கல் செய்து 12 கோடி வென்றுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சகோதரிகள் மொத்தமுள்ள 307 கேள்விகளில் 296 கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதில் இரட்டை சகோதரிகள் எழுதியதால் கல்வி நிறுவனம் சந்தேகம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.