மக்கள் தேர்வு செய்து அரசுக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் வருத்தம்

மக்கள் தேர்வு செய்து அரசுக்கு அதிகாரம் இல்லை: முதல்வர் வருத்தம்

மக்கள் தேர்வு செய்த முதல்வருக்கு அதிகாரம் இல்லை என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தினமும் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும் ஓட்டு உங்களுக்குத்தான் போட்டோம் நீங்கள்தானே செய்ய வேண்டும் என மக்கள் என்னிடம் கேட்கின்றனர் என்றும் ஆனால் இன்னும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பலமுறை கேட்டோம் ஆனால் கிடைக்கவில்லை என்றும் நிர்வாகத்தில் உள்ள எங்களுக்கு தான் அதன் சிக்கல் புரியும் என்று வேதனையுடன் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.