காவி உடை அணிந்தவர்கள் இதை எல்லாம் செய்யலாமா? பிரகாஷ்ராஜ் கேள்வி
நடிகை தீபிகா படுகோனே காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு சாமியார் காவி உடை அணிந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்கிறார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் காவி உடை அணிந்து வரவேற்கின்றனர் இதெல்லாம் தவறு இல்லை, ஆனால் ஒரு நடிகை காவி நிற உடை அணிந்து படத்தில் நடித்தது மட்டும் தவறா என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்
அவருடைய இந்த கேள்விக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது