இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு வேலை: ஆப்பிள் அறிவிப்பு
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகவும், எனவே சுமார் 5 லட்சம் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது..
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இயங்கிவரும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது.