கேஒய்சி அப்டேட்: ரிசர்வ் வங்கி தெரிவித்த முக்கிய தகவல்
வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளைக்கு சென்று கேஒய்சி என்ற வாடிக்கையாளர் தகவல்களை அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாகவே தெரிவித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
கேஒய்சி விபரங்களை இமெயில் நெட் பேங்கிங் ஏடிஎம் அல்லது கடிதம் மூலம் வங்கிகளுக்கு சமர்ப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.