ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 199வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கோல்கட்டா வந்த சச்சினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன்(நவ. 14-18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இதற்கு முன் கோல்கட்டாவில் நாளை துவங்கும் முதல் டெஸ்டில் பங்கேற்கிறார். இது இவரது 199வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் “சல்யூட் சச்சின்’ என்ற பெயரில் ஒரு வார கால கொண்டாட்டத்துக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி நேற்று ஈடன் கார்டன் மைதானம் வந்த சச்சினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
80 இளைஞர்கள் இவரது “போட்டோ’ பொறித்த “டீ-சர்ட்டும்’, 199வது சிறுவர்கள் முதுகில் சச்சின் பெயர் எழுதப்பட்ட “டீ-சர்ட்டையும்’ அணிந்து வரிசையாக நின்று வரவேற்றனர்.